Sunday 14 August 2011

பாதுகைகளின் ஊர்வலம்


ஒவ்வோர் ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்லக்கு யாத்திரைத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அத்திருவிழாவின் போது புணே நகரத்தில் ஐந்து முதல் பத்து லட்சம் பக்தர்கள் திரள்கின்றனர். பிறகு புணேயிலிருந்து இரண்டு பல்லக்குகளில் திருமாலின் பரம பக்தர்களான துக்காராம், தியானேஷ்வர் ஆகிய இரு மகான்கள் பயன்படுத்திய பாதுகைகளை வைத்து சுமந்து கொண்டு ஊர்வலமாக பண்டரிபுரம் செல்கின்றனர். புணேயில் இருந்து பண்டரிபுரம் வரை உள்ள 200 கி.மீ. தூரத்தையும் கால்களுக்கு செருப்பு அணியாமல் நடந்தே செல்கின்றனர். இந்த யாத்திரை சுமார் 20 நாள்கள் வரை நீடிக்கிறது.

கடந்த ஜூன் 30ஆம் தேதி, சுமார் ஆறு லட்சம் பக்தர்கள் டேஹூவில் இருந்து துக்காராமின் பாதுகைகளையும், ஆலண்டியில் இருந்து தியானேஷ்வரின் பாதுகைகளையும் புணேக்கு சுமந்து வந்தனர். பிறகு இரு அணியினரும் சேர்ந்து புணேயிலிருந்து விட்டலர் (திருமால்) கோயிலான பண்டரிபுரத்தை கால்நடையாக நடந்து ஜூலை 29ஆம் தேதி அடைந்தனர். அவ்வளவு தூரம் நடந்தும் பக்தர்கள் உடல் களைப்பு தெரியாமல் உற்சாகத்துடன் இருந்தனராம்.


source :  http://www.chandamama.com/

No comments:

Post a Comment