Sunday 14 August 2011

மிகப் பழமையான அருங்காட்சியகம்

மும்பையிலுள்ள விக்டோரியாஆல்பர்ட் அருங்காட்சியகம் தொடங்கி 150 ஆண்டுகள் ஆகிறது. சமீபத்தில் யுனெஸ்கோ ஸ்தாபனத்தின் பரிசைப் பெற்றது இது! 1855ஆம் ஆண்டு, பாவு டாஜிலாட் என்பவரால் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத்திற்கு, அப்போதைய இங்கிலாந்து அரசியான ராணி விக்டோரியாவின் பெயரும், இளவரசர் ஆல்பர்ட்டின் பெயரும் சேர்த்து சூட்டப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, இந்த அருங்காட்சியகத்தின் பொறுப்பை மும்பை நகராட்சிக் கழகம் மேற்கொண்டது. ஆனால் அதன்பிறகு இதனுடைய பராமரிப்பு குன்றியதால், ஐ‡கூஅஇஏ நிறுவனத்தின் சிபாரிசின் பேரில் அருங்காட்சியகத்தின் பராமரிப்பை சீராக்கவும், மேலும் விரிவு படுத்தவும் தீர்மானித்த மாநில அரசு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. ஜம்னாலால் பஜாஜ் ஸ்தாபனத்தின் ஒத்துழைப்புடன், அருங்காட்சியகம் மிகச் சிறப்பாக மாற்றப்பட்டது. சீர்த்திருத்தப் பணிகள் முடிவடையும் போது, அருங்காட்சியகத்தின் 150வது ஸ்தாபன ஆண்டு விழாவும் வந்தது. யுனெஸ்கோ ஸ்தாபனத்தின் சிறப்புப் பரிசைப் பெறவேண்டுமெனில், அது எந்த அளவிற்கு சிறப்பாக சீர்த்திருத்தப்பட்டு தற்போது இயங்குகிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இப்போது, அதனுடைய பெயர் முதன் முதலாக அதை நிறுவிய பாவு டாஜிலாட் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.

source : http://www.chandamama.com/

No comments:

Post a Comment