There was an error in this gadget

Sunday, 14 August 2011

நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்

வெள்ளைப் பூண்டு:

பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள்.

இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.

அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

வெங்காயம்:


வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.


நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள்காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.


காரட்:

நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.


ஆரஞ்சு :

வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காதபோது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.


பருப்பு வகைகள் :

பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கோதுமை ரொட்டி :

நரம்பு மண்டலமும்மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும்நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


இறால் மீன் மற்றும் நண்டு :

அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

தேநீர் :


தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள்
அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.


பாலாடைக்கட்டி :

சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

முட்டைக்கோஸ் :

குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது.

உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன.

இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்..

source : http://www.tndawa.blogspot.com/

தமிழன் மானமுள்ளவன்

தமிழா வாழ்வு முடியும் நாளை
ஒருபோதும் எண்ணி விடாதே
வாழ்வு விடியும் நாளுக்காக
போராடு நிச்சியமாய் ஓர் நாள்
விடியும் ....

தன்னம்பிக்கை

"முடிந்தால் முயற்சி செய் !.
முடியாவிட்டால் பயிற்சி செய் !!.".
bye

முயற்சியே!

தேனிக்களின் முயற்சியே
பூக்களின் சிறுதுளி தேனும்
தேன் கூட்டை நிரப்புகிறது
சிற்பியின் முயற்சியே
செதுக்க செதுக்க
சிலை வடிக்கிறது
மனித முயற்சியே
நிலவில் முதன்முதலில்
கால் பதித்தது

வேம்பும் குளிர்சாதனமும்

வேப்பமரம் இயற்கை நமக்கு அளித்துள்ள குளிர்சாதனக் கருவியாகும். தோட்டத்திலுள்ள ஒரு வேப்பமரம், பத்து குளிர்சாதனக் கருவிகளுக்கு ஒப்பாகும். ஏனெனில், இது வெப்பநிலையை பத்து டிகிரி வரைக் குறைக்கவல்லது. மருந்துகள், பல வாசனைப் பொருட்கள், கிருமிநாசினிகள் ஆகியவற்றைத் தயாரிக்க வேப்பிலைகள் பயன்படுகின்றன. உலகில், இந்தியாவில்தான் இப்போது அதிக வேப்ப மரங்கள் உள்ளன. சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கருத்தரங்கில் ஓர் எச்சரிக்கை வெளியிடப்பட்டது. வேப்பமரத்தின் பயன்களை அறிந்த மற்ற நாடுகள், குறிப்பாக ஆஸ்திரேலியா, வியட்நாம் ஆகியவை இப்போது அதிக அளவில் வேப்பமரங்களைப் பயிரிடத் தொடங்கியுள்ளன. நாம் இருக்கும் வேப்பமரங்களையெல்லாம் வெட்டிக் கொண்டிருந்தால் இழப்பு நமக்குத்தான்!
 
தேசியச் செல்வம்
 
ஜம்முகாஷ்மீர் அரசாங்கத்திடம் பல மொழிகளில் கையினால் பொறிக்கப்பட்டுள்ள 16,000 நூல்கள் உள்ளன. இலக்கியம், புவியியல், சரித்திரம், மதம், தாந்திŽகம், வானசாஸ்திரம், மருத்துவம் முதலிய பல துறைகளிலும் இயற்றப்பட்ட இவை, அந்த அரசாங்கம் பெற்றுள்ள அரிய பொக்கிஷமாகும். கி.பி.ஐந்தாவது அல்லது ஆறாம் நூற்றாண்டில் இவை இயற்றப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மரத்தில் பொறிக்கப்பட்ட இந்தக் கையெழுத்துப் பிரதிகள் உலகிலேயே மிகப் பழமையானவை என்றும் கருதப்படுகின்றன. இவற்றை ஜம்மு அரசு தேசியச் செல்வமாக அறிவித்துள்ளன.
 

வேலூர் சிப்பாய்க் கலகம்

வேலூர் சிப்பாய்க் கலகம் என்பது, தமிழகத்தில் ஜூலை 10, 1806 ம் தேதி புகழ்பெற்ற வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த சிப்பாய்களின் கிளர்ச்சியாகும்.   இந்த கிளர்ச்சி தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் விதை.

1805ம் ஆண்டு, வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த தென்னிந்திய துருப்புகள் கலகத்தில் ஈடுபட்டனர். அந்த ஆண்டில், இந்தியப் படைகள் சமய அடையாளங்ளை வெளிப்படுத்தக்கூடாது, தலையில் குடுமி வைக்கக் கூடாது என்றும், ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டும் தான் அணிய வேண்டும் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் ஆணையிட்டனர்.

அதுமட்டுமின்றி, சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி தொப்பி அணிந்து, அதில் மாட்டுத் தோலால் ஆன பட்டையை  வைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அங்கிருந்த 1500 இந்து, முஸ்லிம் துருப்புக்கள் கோபமடைந்து வெடித்தெழுந்தனர்.

அந்த கலகம் செய்தவர்களின் தலைவர்களுக்கு 600 பிரம்படி கிடைத்தது. இந்த நடவடிக்கை துருப்புக்களை இன்னும் கோபமூட்டியது. வேலூரில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தானின் மகன்கள் துருப்புக்களைத் தூண்டி விட்டதாக பிரிட்டிஷ் ராணுவத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. கலகத்தில் ஈடுபட்ட சிப்பாய்கள் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர்.

இதன் எதிரொலியாக, கடும் கோபத்திலிருந்த இந்திய சிப்பாய்கள் ஜூலை 10ம் தேதி 1806ம் ஆண்டு அதிகாலையில் உறங்கிக் கொண்டிருந்த ஆங்லேய அதிகாரிகள் பலரை படுக்கையிலேயே கொன்றனர். அங்கிருந்த 350 பிரிட்டிஷ் அதிகாரிகளில் 100 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த சம்பவம் இந்திய விடுதலைப் போராட்டமாக அங்கீகரிக்கப்படவில்லை. கலகத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான வீரர்களை அங்கு விரைந்த பிரிட்டிஷ் படைகள் கொன்று குவித்தனர். பல வீரர்கள் கைது செய்யப் பட்டனர். அவர்கள் பீரங்கிகளில் கயிற்றால் கட்டப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தக் கலகம் தான், 1857ம் ஆண்டு நடந்த மிகப் பெரும் கலகத்திற்க்கு முன்னோடியாக இருந்தது.

source : http://www.chandamama.com/

பூசணி பூதம்!


 பூசணி பூதம்!

தமிழ்நாட்டில் புதிதாகக் கட்டப்பட்ட வீட்டு வாசலில் ஒரு பூசணிக்காய் கட்டப் பட்டிருக்கும். அதன் மீது வண்ணங்களில் பூதத்தின் முகம் பயங்கரமாக வரையப் பட்டிருப்பதைக் காணலாம். இவ்வாறு செய்வதால் புதிய வீட்டிற்குப் பிறரின் கண்படாது என்று திருஷ்டி கழித்து இப்பூசணியை எடுத்துப் போட்டு உடைக் கிறார்கள். இம்மாதிரி பூசணிக்காய்களை புதிய தொழில்கள் ஆரம்பிக்கும்போதும், மோட்டார், பஸ், லாரி, மோட்டார் சைக்கிள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற வாகனங்களை வாங்கியதும் ‘திருஷ்டி’ கழிப்பதாகக் கருதி போட்டு உடைக்கும் பழக்கமும் பரவலாக உள்ளது.

 தெய்வமா அவன்!
மகாபாரதத்தில் கூறப்பட்டு உள்ள குரு வம்ச அரசகுமாரனான துரியோதனனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பொறாமைக்காரன், கொடியவன், நயவஞ்சகன், ஏமாற்று பவன் என்றெல்லாம் தானே கூறுவீர்கள்! ஆனால் நீங்கள் நினைப்பதற்கு நேர்மாறாக யமுனைப் பள்ளத்தாக்கின் மேற்குப் பகுதியில் உத்திரகாசியில் வாழ் பவர்கள் அவனை தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள். இதை அறிந்ததும் நீங்கள் துரியோதனன் தெய்வமா என்று எண்ணித் திகைத்துத் தானே போகிறீர்கள்!

source : http://www.chandamama.com/