Sunday 14 August 2011

வேம்பும் குளிர்சாதனமும்

வேப்பமரம் இயற்கை நமக்கு அளித்துள்ள குளிர்சாதனக் கருவியாகும். தோட்டத்திலுள்ள ஒரு வேப்பமரம், பத்து குளிர்சாதனக் கருவிகளுக்கு ஒப்பாகும். ஏனெனில், இது வெப்பநிலையை பத்து டிகிரி வரைக் குறைக்கவல்லது. மருந்துகள், பல வாசனைப் பொருட்கள், கிருமிநாசினிகள் ஆகியவற்றைத் தயாரிக்க வேப்பிலைகள் பயன்படுகின்றன. உலகில், இந்தியாவில்தான் இப்போது அதிக வேப்ப மரங்கள் உள்ளன. சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கருத்தரங்கில் ஓர் எச்சரிக்கை வெளியிடப்பட்டது. வேப்பமரத்தின் பயன்களை அறிந்த மற்ற நாடுகள், குறிப்பாக ஆஸ்திரேலியா, வியட்நாம் ஆகியவை இப்போது அதிக அளவில் வேப்பமரங்களைப் பயிரிடத் தொடங்கியுள்ளன. நாம் இருக்கும் வேப்பமரங்களையெல்லாம் வெட்டிக் கொண்டிருந்தால் இழப்பு நமக்குத்தான்!
 
தேசியச் செல்வம்
 
ஜம்முகாஷ்மீர் அரசாங்கத்திடம் பல மொழிகளில் கையினால் பொறிக்கப்பட்டுள்ள 16,000 நூல்கள் உள்ளன. இலக்கியம், புவியியல், சரித்திரம், மதம், தாந்திŽகம், வானசாஸ்திரம், மருத்துவம் முதலிய பல துறைகளிலும் இயற்றப்பட்ட இவை, அந்த அரசாங்கம் பெற்றுள்ள அரிய பொக்கிஷமாகும். கி.பி.ஐந்தாவது அல்லது ஆறாம் நூற்றாண்டில் இவை இயற்றப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மரத்தில் பொறிக்கப்பட்ட இந்தக் கையெழுத்துப் பிரதிகள் உலகிலேயே மிகப் பழமையானவை என்றும் கருதப்படுகின்றன. இவற்றை ஜம்மு அரசு தேசியச் செல்வமாக அறிவித்துள்ளன.
 

No comments:

Post a Comment