Sunday 14 August 2011

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு
 
காளை மாட்டுடன் போரிடுவது என்பது ஸ்பெயின் நாட்டு தேசிய விளையாட்டு! காளைமாட்டைத் துரத்திப் பிடிப்பது இந்தியாவிலும் பல இடங்களில் உண்டு. குறிப்பாகத் தமிழ்நாட்டில் இது ‘ஜல்லிக்கட்டு' என்ற பெயரில் பொங்கலின் போது கிராமங்களில் கொண்டாடப்படுகிறது.
 
காளை மாட்டின் கொம்புகளில் சிவப்புத் துணியினாலான பண முடிச்சு ஒன்றைக் கட்டி, அதை ஓடவிடுவார்கள். கிராமத்து இளைஞர்கள் அதைத் துரத்திப் பிடித்து, கொம்பிலுள்ள துணியை அவிழ்த்துப் பணத்தை எடுத்துக் கொள்வார்கள். பணத்தைப் பெறுவதை விட, காளையை அடக்குவது வீரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
 
இந்திரப்பிரஸ்தின் இன்றைய நிலை
 
இந்திரப்பிரஸ்தம்' என்ற இடம் தான் பாண்டவர்கள் ஆண்ட மாளிகை! குருகேஷத்திரப் போர் முடிந்த பின், யுதிஷ்டிரரும் அவருடைய சகோதரர்களும் கிருஷ்ணரின் பேரப் பிள்ளையான அநிருத்தனிடம் ராஜ்ய பாரத்தை ஒப்படைத்து விட்டு, காட்டை நோக்கிச் சென்றனர். அநிருத்தனுக்குப் பிறகு அவனுடைய சந்ததியினர் ஆண்டனர். கடைசியாக ஆண்ட மன்னர் பெயர் கேஷமகா! அவர் அவருடைய மந்திரி விஸர்வாவினால் ஆட்சிப் பீடத்திலிருந்து நீக்கப்பட்டார். பிறகு மந்திரியின் வாரிசுகள் சுமார் 500 ஆண்டுகளுக்கு ஆண்டனர். இப்போது அந்த இடத்தில், ஹுமாயுனால் கட்டப்பட்ட புரானா கிலா உள்ளது.
 

No comments:

Post a Comment