Sunday 14 August 2011

பூசணி பூதம்!


 பூசணி பூதம்!

தமிழ்நாட்டில் புதிதாகக் கட்டப்பட்ட வீட்டு வாசலில் ஒரு பூசணிக்காய் கட்டப் பட்டிருக்கும். அதன் மீது வண்ணங்களில் பூதத்தின் முகம் பயங்கரமாக வரையப் பட்டிருப்பதைக் காணலாம். இவ்வாறு செய்வதால் புதிய வீட்டிற்குப் பிறரின் கண்படாது என்று திருஷ்டி கழித்து இப்பூசணியை எடுத்துப் போட்டு உடைக் கிறார்கள். இம்மாதிரி பூசணிக்காய்களை புதிய தொழில்கள் ஆரம்பிக்கும்போதும், மோட்டார், பஸ், லாரி, மோட்டார் சைக்கிள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற வாகனங்களை வாங்கியதும் ‘திருஷ்டி’ கழிப்பதாகக் கருதி போட்டு உடைக்கும் பழக்கமும் பரவலாக உள்ளது.

 தெய்வமா அவன்!
மகாபாரதத்தில் கூறப்பட்டு உள்ள குரு வம்ச அரசகுமாரனான துரியோதனனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பொறாமைக்காரன், கொடியவன், நயவஞ்சகன், ஏமாற்று பவன் என்றெல்லாம் தானே கூறுவீர்கள்! ஆனால் நீங்கள் நினைப்பதற்கு நேர்மாறாக யமுனைப் பள்ளத்தாக்கின் மேற்குப் பகுதியில் உத்திரகாசியில் வாழ் பவர்கள் அவனை தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள். இதை அறிந்ததும் நீங்கள் துரியோதனன் தெய்வமா என்று எண்ணித் திகைத்துத் தானே போகிறீர்கள்!

source : http://www.chandamama.com/

No comments:

Post a Comment