Sunday 14 August 2011

கண்ணாமூச்சி விளையாட்டு!


 கண்ணாமூச்சி விளையாட்டு!
நிலா பால் போலக் காயும்போது நீங்கள் உங்கள் நண்பர்களைக் கூட்டிக் கொண்டு கண்ணாமூச்சி விளையாட்டை விளையாட லாமே. இது வழக்கமாக ஒருவர் கண்ணை இன்னொருவர் பொத்தி மற்றவர்கள் ஓடி ஒளிந்து கொள்ள அவர்களைக் கண்டுபிடிக் கும் விளையாட்டைப் போல அல்ல.
இதில் சிறுவர்கள் இரு கட்சிகளாகப் பிரிக்கப் படுகிறார்கள். ஒரு கட்சி நிழல் பகுதியிலும் மற்ற கட்சி நிலா வெளிச்சத்திலும் இருக்கும். நிழல் பகுதியிலிருந்து யாராவது வெளியே வந்தாலே மற்ற கட்சி அவரைப் பிடிக்க முடியும். அதுபோலத் தான் நிலா வெளிச்சத்தில் உள்ளவர் களில் யாராவது வெளியே வந்தால் எதிர்க்கட்சி பிடிக்க முடியும். அவர்களைத் தம் பகுதிகளிலிருந்து வெளியே வரச் செய்ய ஆசைகள் காட்டப்படும். இதற்கு புள்ளிகளைக் கணக்கிட்டு வெற்றி தோல்வியை முடிவு செய்யலாம்.
 பாதாம் பருப்பு ஒரு நாணயம்!
குஜராத்தில் 17வது நூற்றாண்டில் கசக்கும் பாதாம் பருப்புகள் நாணயங் களாகப் பயன்படுத்தப்பட்டதாம். இவ்வித 60 பாதாம் பருப்புகளின் மதிப்பு ஒரு காசு!


Source : http://www.chandamama.com/

No comments:

Post a Comment